ஜப்பான் இடையில் புகுந்து குழப்புது... சீனா சொல்லுது குற்றச்சாட்டு

Sekar Tamil
பீஜிங்:
சரியில்லை... இது சரியில்லை... தென்சீனக் கடலில் உள்ள சூழ்நிலையை ஜப்பான் குழப்ப முயற்சி செய்கிறது என்று சீனா குற்றச்சாட்டு கொடியை தூக்கி உள்ளது.


தென்சீனக் கடலின் மீது சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதால் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது இந்த கடல்பகுதி.


சீனாவுக்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என்று ஏற்கனவே தீர்ப்பு கூறிவிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து சீனா அடம் பிடித்து வருகிறது. 


இந்நிலையில் தென் சீனக் கடலில் தனது செயல்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. தென் சீனக்கடலில், அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்துப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக ஜப்பான் ராணுவ மந்திரி டொமோமி இனடா அறிவிக்க... சீனாவிற்கு தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிவிட்டது. 


இதன்மூலம் தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சூழ்நிலையை ஜப்பான் குழப்ப முயற்சி செய்கிறது என சீனா குற்றச்சாட்டு கொடியை தூக்கினாலும் யாரும் சீனாவின் பேச்சை சட்டை செய்யவில்லை என்பதுதான் உண்மை.



Find Out More:

Related Articles: