வரி செலுத்த முடியாது... பிடிவாதம் பிடிக்கும் திருப்பதி தேவஸ்தானம்

frame வரி செலுத்த முடியாது... பிடிவாதம் பிடிக்கும் திருப்பதி தேவஸ்தானம்

Sekar Tamil
திருப்பதி:
முடியாது... முடியவே முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளதால் திருப்பதி நகராட்சி விழி பிதுங்கி போய் உள்ளதாம். 


என்ன விஷயம் தெரியுங்களா? திருப்பதி நகராட்சிக்கு, 39 கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்த தேவஸ்தானம் மறுத்துள்ளது.


திருப்பதியில், தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, பநீநிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம், கோவிந்தராஜ சத்திரங்கள் உள்ளன.
இவற்றுக்காக, திருப்பதி நகராட்சிக்கு தேவஸ்தானம் ஆண்டுதோறும் சொத்துவரி செலுத்த வேண்டும். ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக, தேவஸ்தானம் வரி செலுத்தவில்லை. இதனால் வட்டியுடன் சேர்த்து வரி பாக்கி 39 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது.


'தேவஸ்தானம், பக்தர்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் என்பதால் சொத்து வரி செலுத்த தேவையில்லை' என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் ஆந்திர ஐகோர்ட்டில் திருப்பதி நகராட்சி அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை விசாரித்த ஐகோர்ட், 'தேவஸ்தானம், சேவை நிறுவனமாக இருந்தாலும், பக்தர்களிடம் வாடகை வசூலிக்கிறது. எனவே, நகராட்சிக்கான வரி பாக்கியை உடன் செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டது.


இதுகுறித்து அறிந்த ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருப்பதி நகராட்சிக்கான வரியை செலுத்தும்படி தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டார். அட போங்கப்பா... நாங்க வசூல்தான் செய்வோம்... வரி செலுத்த மாட்டோம் என்பது போல் தேவஸ்தானம் வரி செலுத்த மறுத்து வருகிறது.

சந்திரபாபு நாயுடு

Image result for சந்திரபாபு நாயுடு

இதனால் திருப்பதியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் விழி பிதுங்கி போய் உள்ளது. ஏழுகொண்டல வாடா... நீயே பார்த்துக்கோப்பா...


Find Out More:

Related Articles: