சென்னை:
பட்டனை தட்டினார்... மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்சிங்க மூலமாக.
எங்கிருந்து எங்கு தெரியுங்களா? இதோ சொல்லிடுவோம். சென்னை
தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதா 197 புதிய அரசு பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் டூ சின்னமலை இடையிலான, மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் தொடக்கி வைத்தார்.
இதுமட்டுமா? விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார். இன்று தொடங்கும் சேவையில், முதல் ரயில், பயணிகள், வி.ஐ.பி.,க்கள் யாரும் இன்றி, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அடுத்த ரயிலில், மத்திய அமைச்சர்கள், வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.