ஜாமீனில் வந்தால் பிரச்னை? ராம்குமார் தற்கொலை... தலைவலியாகுது

Sekar Tamil
சென்னை:
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தற்கொலை விவகாரம் தற்போது பெரிய தலைவலியை தமிழக காவல்துறைக்கு கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 


விஷயம் என்னவென்றால்...ராம்குமாரின் மரணம் தொடர்பான சில செய்திகளை அவருடன் சிறையில் இருந்த ஒரு கைதி, மாஜிஸ்திரேட்டிடம் கூறி பெரும் அதிர்ச்சி புயலை கிளப்பி உள்ளாராம். 


 கடந்த 18ம் தேதி, சமையல் அறைக்கு அருகில் இருந்த மின் ஒயரை இழுத்து கடித்து தன் உடலில் செலுத்தி ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.


 அவரின் மரணம் சிறையில் நிகழ்ந்ததால், மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த ஒரு கைதி கூறிய தகவல் முக்கியமானதாக கருதப்படுகிறது.


அவர் மாஜிஸ்திரேட்டிடம் கூறியபோது “ராம்குமார் தனியாக அடைக்கப்பட்டிருந்தார். அவரிடம் பேச யாரையும் அனுமதிக்கவில்லை.
கடந்த வாரம் ராம்குமார் தனியாக இருந்த போது, நான் அவரிடம், கவலைப்படாதே.. எல்லாம் சரியாகி விடும்.. என்று சொன்னேன். அதற்கு ராம்குமார்  “சுவாதி யாரென்றே எனக்குத் தெரியாது. நான் சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும். நான் வெளியே சென்று போலீசார் என்னை எப்படி இந்த வழக்கில் சிக்க வைத்தார்கள் என்று சொல்லுவேன் என்று சொல்லிக்கிட்டு இருந்தார். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த சிறைத்துறை அதிகாரி எங்களை கடுமையாக எச்சரித்தார்” என்று அவர் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளார்.


 அந்த சிறைகைதி கூறிய தகவலில் இருந்து ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது. ராம்குமார் ஜாமீனில் வெளிவந்தால் உண்மையை கூறிவிடுவார் என்பதால் அவர் கடைசியாக பேசியதே அவரின் மரணத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்று இந்த தகவல் அறிந்து சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


உண்மையில் என்ன நடந்தது என்பது அந்த சிறைச்சாலைக்கே வெளிச்சம்...


Find Out More:

Related Articles: