நள்ளிரவில் குண்டு மழை... 4 டாக்டர்கள் பலியான சோகம்

Sekar Tamil
டமாஸ்கஸ்:
யார்... யார்... இந்த கொடுஞ்செயலை செய்தது என்றுதான் கேட்கின்றனர் சிரியாவை சேர்ந்தவர்கள். காரணம் என்ன தெரியுங்களா?


போர்நிறுத்த ஒப்பந்தம் சிரியாவில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் குண்டு மழை பொழிய இதில் சிக்கி தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 டாக்டர்கள், அரசுக்கு எதிரான போராளி குழுவினர் பலியானதால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. 


சிரியாவின் அலெப்போ நகரின் தென்கிழக்கு பகுதியில் நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ள நிலையில் இந்த செயல் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 டாக்டர்கள், அரசுக்கு எதிரான போராளி குழுவினரின் உயிரை பலிவாங்கி விட்டது. இத்தகவலை அங்குள்ள போர் கண்காணிப்பு முகமை தெரிவித்துள்ளது.


ரஷ்யா அல்லது சிரியா நாட்டு விமானப் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



Find Out More:

Related Articles: