படகு விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு...

frame படகு விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு...

Sekar Tamil
டாக்கா:
சோகம் தொடர்கதையாகி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது இந்த செய்தியால்... என்னவென்றால்...


வங்காளதேசத்தில் படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்ததுதான் அந்த சோக செய்தி. வங்காளதேசத்தின் தென்பகுதியில் உள்ள பரிசால் மாவட்டம், பனாரிபாரா பகுதியை சேர்ந்த 80 பேர் படகில் சந்தியா ஆற்றை கடக்க முயன்றனர். 
அப்போது படகு திடீரென ஆற்றின் நடுவே நிலைதடுமாறி கவிழ்ந்தது.


தண்ணீரில் மூழ்கிய சிலர் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நீந்தி கரையை வந்தடைந்தனர். ஆனால் 30க்கும்  அதிகமானவர்கள் காணாமல் போய்விட்டனர். 


இதில் 14 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. தற்போது மேலும் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More