அமெரிக்க ஜெட் ரக போர் விமானம் கடலில் விழுந்து விபத்து...

Sekar Tamil
டோக்கியோ:
அமெரிக்க ராணுவத்தின் ஜெட் ரக போர் விமானம் ஒன்று ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏவி8பி ஹாரியர் 2 ஜெட் ரகத்தைச் சேர்ந்த போர் விமானம் ஒகானாவா தீவில் இருந்து புறப்பட்டது.


சிறிது நேரத்திலேயே கடலின் கிழக்குப் பகுதியில் இந்த போர் விமானம் விழுந்தாக விபத்தை நேரில் பார்த்த ஜப்பான் நாட்டின் கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெரும் பரபரப்பு உருவானது. 


விமானம் விழுந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து கடலில் விழுந்தவர்களை பத்திரமாகக் காப்பாற்றி கரை சேர்த்தனர். ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் விமானத்தை தேடும் பணியில் அப்பகுதியை சேர்ந்த கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.



Find Out More:

Related Articles: