அட வரிசையில் வாப்பா... தானே அறுவை சிகிச்சை செய்த என்ஜினியர்

frame அட வரிசையில் வாப்பா... தானே அறுவை சிகிச்சை செய்த என்ஜினியர்

Sekar Tamil
இங்கிலாந்து:
அட வரிசையில் வாப்பா... டாக்டரின் செம கடமை உணர்ச்சியால் இங்கிலாந்து நாட்டில் என்ஜினியர் ஒருவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவதான் டாக் ஆப் த சிட்டியாக உள்ளது.


 இங்கிலாந்தில் வசித்து வருபவர் கிரகாம் ஸ்மித். என்ஜினியர். 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்புறமும் பிரச்னை தீராததால் நொந்து போய் காணப்பட்டார். 


இந்நிலையில் வயிற்றில் தையல் போட்ட இடத்தில் அவருக்கு வலியுடன் ரத்த கசிவும் ஏற்பட்ட பிடித்தார் ஓட்டம் டாக்டரிடம். தனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யும்படி கேட்க... அதற்கு டாக்டர் அவரை அறுவை சிகிச்சைகாக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க சொல்லிவிட்டார்.


வலியால் அவதிப்பட்ட கிரகாம்... சட்டென்று ஒரு முடிவெடித்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போ இவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவ நிர்வாகம் தானாக முன்வந்து அவரது உடல் நிலையை பரிசோதனை செய்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More