நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை... நிறுத்தியது யாரு...?

frame நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை... நிறுத்தியது யாரு...?

Sekar Tamil
நியூயார்க்:
யாருய்யா அது இப்படி பீதியை கிளப்பியது... என்று பாதுகாப்பு படையினர் நொந்து போய் உள்ளனர்.


அமெரிக்காவிற்கு எப்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் மர்ம பார்சல்களோ... மர்ம வாகனமோ இருந்தால் மக்கள் மத்தியில் பெரும் பீதிதான் ஏற்படுகிறது.


இதுபோன்ற ஒரு சம்பவம்தான் விமான பயணிகளை அலற வைத்துள்ளது. எப்படி தெரியுங்களா? அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தின் ‘பி’ முனையத்தில் கேட்பாரற்று வெகுநேரமாக ஒரு கார் நின்றிருந்தது.


இதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் பரக்க... விமான நிலையத்துக்குள் இருந்த பயணிகள் உட்பட அனைவரும் வெளியேறப்பட்டனர். அதுமட்டுமா... விமானங்கள் தரையிறங்கவும், அங்கிருந்து புறப்பட்டு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.


மோப்ப நாய்களுடன் விரைந்துவந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வாகனத்தை பரிசோதிக்க அட... ஒன்றுமே இல்லைப்பா... என்று கையை விரித்த பின்னரே மக்கள் ஆசுவாசம் அடைந்தனர். பின்னர் அந்த கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு பிறகே மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More