பறந்த விமானத்தில் சோகம்... இதய நோய் குழந்தை இறந்தது...

frame பறந்த விமானத்தில் சோகம்... இதய நோய் குழந்தை இறந்தது...

Sekar Tamil
ராய்ப்பூர்:
சோகத்திலும் சோகமாக இதய நோயால் பாதிக்கப்பட்ட 2 மாத குழந்தை பெங்களூருக்கு பறந்த விமானத்தில் இறந்ததால் உடனடியாக ராய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு தனியார் விமானம் புறப்பட்டது.  இதில் ஒரு பெற்றோர் பயணம் செய்தனர். தங்களின் 2 மாத குழந்தைக்கு இதயத்தில் ஏற்பட்டிருந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்கள் பெங்களூருக்கு பயணமாகினர்.


விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியது. இதனால் விமானத்தை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கினர்.


உடன் தயாராக இருந்த டாக்டர்கள் குழு குழந்தையை பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்ததால் பெரும் சோகம் விமான பயணிகளுக்கு ஏற்பட்டது. 


பின்னர் மற்ற பயணிகளுடன், விமானம் பெங்களூரு புறப்பட்டு சென்றது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More