விரைவில் வீடு திரும்புவார் முதல்வர்... டாக்டர்கள் நம்பிக்கை!

Sekar Tamil
சென்னை:
உடல்நலம் தேறி விரைவில் முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


முதல்வர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு அப்பல்லோ மருத்துவக்குழு சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தது.


இதையடுத்து காய்ச்சல் முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பில் கூறப்பட்டது. இருப்பினும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் ஜெயலலிதா.


இந்நிலையில் மருத்துவமனை டாக்டர்கள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார், சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் என்ற தகவல் தவறானது. அவர் நலமாக உள்ளார்.  


அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.


Find Out More:

Related Articles: