யாரங்கே... யாரங்கே... யாராவது வாங்கப்பா... தேர்தலில் நிற்க...

Sekar Tamil
சென்னை:
யாரங்கே... யாரங்கே... யாருப்பா அங்கே... யாராவது இருக்கீங்களா? என்று தேடுது தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்களை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


உள்ளாட்சி தேர்தலுக்கு தேதி அறிவித்த உடனேயே அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து விட்டன. 
 
ஆனால் 2016 தமிழக சட்டசபை தேர்தலில் பெரும் மையப்புள்ளியாக வர்ணிக்கப்பட்டு இப்போது சீந்துவார் இன்றி இல்லாமல் இருக்கும் தேமுதிகவின் நிலை அந்தோ பரிதாபமாக இருக்காம். 


சட்டசபை தேர்தலில் டெபாசிட் கூட பெறமுடியாத கட்சியாக மாறிய தேமுதிகவில் உள்ளவர்கள் தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அச்சப்படுகின்றனராம். தேர்தலுக்கு செலவு செய்தாலும் டெபாசிட் கிடைப்பதே கடினம் என்பதால் எங்கே நம்மை விடாப்பிடியாக நிற்க வைத்து விடுவார்களோ... என்று தேமுதிக நிர்வாகிகள் வீட்டை விட்டு வெளியில் கூட வரமாட்டேன் என்கிறார்களாம். 


இதனால் வேட்பு மனுதாக்கல் செய்யக்கூட ஆட்கள் இல்லாமல் பரிதவித்து வருகிறது தேமுதிக. இந்த நிலை தொடர்ந்தால் விஜயகாந்தே கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வந்தாலும் வந்துவிடுவார் என்கின்றனர். 



Find Out More:

Related Articles: