புதுடில்லி :
மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. என்னவென்று தெரியுங்களா?
காஷ்மீரின் யூரி ராணுவ முகாம்கள் மீது, பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள், 18 பேர் பலியான சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற, சிந்து நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் ஆய்வுக் கூட்டத்தில், பாக்.,கிற்கு செல்லும் மூன்று நதிகளில், இந்தியாவிற்கு உள்ள உரிமைகளை முழுமையாக பயன்படுத்தவும், ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டுமே தரவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் 1996ல், பாக்.,கிற்கு, இந்தியா நல்லெண்ண அடிப்படையில் வழங்கிய, எம்.எப்.என்., எனப்படும், 'வர்த்தகத்திற்கு மிகவும் உகந்த நாடு' என்ற அந்தஸ்தை, மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாம். இதுகுறித்து பிரதமர் தலைமையில் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.