பறந்தபோது அதிர்ச்சி... ஒரு என்ஜின் பழுது... தரையிறங்கிய விமானம்

frame பறந்தபோது அதிர்ச்சி... ஒரு என்ஜின் பழுது... தரையிறங்கிய விமானம்

Sekar Tamil
அபுதாபி:
அபுதாபியில் இருந்து புறப்பட்ட எத்திஹாட் விமானம் ஒரு என்ஜின் செயலிழந்ததால் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


அபுதாபியில் இருந்து சிட்னி நோக்கி எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் புறப்பட்டுச் சென்றது. சில நிமிடங்களில் விமானத்தில் உள்ள இரண்டு என்ஜின்களில் ஒன்று செயலிழக்க... இதை உடனே கண்டறிந்த விமானி அபுதாபியை நோக்கி விமானத்தை திருப்பினார்.


தொடர்ந்து அபுதாபி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்க... விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. இதில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


Find Out More:

Related Articles:

Unable to Load More