இந்திய ராணுவம் அதிரடி... குஜராத்தில் பாதுகாப்பு... டைட்...டைட்...

Sekar Tamil
அகமதாபாத்:
இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை "டைட்" ஆக்கியிருக்கிறோம் என்ற துணை முதல்வர் நிதின்படேல் தெரிவித்துள்ளார்.


சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நள்ளிரவில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். யூரி தாக்குதல் சம்பவத்திற்கு பதிலுக்கு பதிலாக நடந்துள்ளது இந்த அதிரடி தாக்குதல். இதனால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியிருப்பதால் எல்லைப் பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.


நிலம் மற்றும் சர்வதேச கடல் பகுதிகளை குஜராத் மாநிலம் பாகிஸ்தான் நாட்டுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கடல் பகுதி வழியாக குஜராத் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் அதிகம் என்பதால் பாதுகாப்பு பணிகள் "செமத்தியாக டைட்" செய்யப்பட்டுள்ளன. 


இதுகுறித்து குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் “பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் தங்க வைத்துள்ளோம். கடற்பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.


மீனவர்களை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


Find Out More:

Related Articles: