ஆர் கே நகரில் சசிகலா அணியின் வாக்குறுதிகள்

SIBY HERALD

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க.வில் இருந்து இரு அணிகளாக களத்தில் நிற்கின்றன. அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். எதிரணியான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.






இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான அ.தி.மு.க. அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார். 
இந்த தேர்தல் அறிக்கையில், ஆர்.கே.நகருக்கான பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக வீடற்ற 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 10 நடமாடும் மருத்துவமனைகள், வேலைவாய்ப்பு ஆலோசனை மையம், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மாசு இல்லாமல் நவீன மயமாக்கப்படும், புதிய மீன் அங்காடி அமைக்கப்படும், எண்ணூர் -மணலி சாலையில் ரூ.117 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும், அரசு மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும், வாரந்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: