டிடிவி தினகரன் கட்சியில் பணம் கொடுத்தவர் கைது

frame டிடிவி தினகரன் கட்சியில் பணம் கொடுத்தவர் கைது

SIBY HERALD

ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் அதிமக அம்மா கட்சியின் பகுதி செயலர் சந்தானம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். ஆர்கே நகர் தொதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இந்நிலையில் ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக(அ) அணி பகுதி செயலர் பிடிபட்டார்.
தண்டையார்பேட்டையில் பணத்துடன் சந்தானத்தை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரை கைதுசெய்தனர். டி.டி.வி தினகரனுக்கு வாக்களிக்கக் கோரி பொதுமக்களுக்கு பணம் தர சந்தானம் முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 




டிடிவி.தினகரன் தரப்பைச் சேர்ந்த ஒருவர் ஏற்கனவே பணப்பட்டுவாடா செய்தபோது கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் கொருக்குப் பேட்டை பகுதியில் குத்துவிளக்கு வழங்கிய நளினி என்ற பெண்ணை பறக்கும் படையினர் மடக்கிப்பிடித்தனர். இந்நிலையில் டிடிவி.தினகரன் தரப்பைச்சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Find Out More:

Related Articles: