சசியின் படத்தை தூக்கி எறிய தயாரா???
அதிமுக தலைமை கழகத்தில் உள்ள சசிகலா படத்தை உடனடியாக அகற்றி விட வேண்டும் என எடப்பாடி அணிக்கு ஓபிஎஸ் அணி முதல் கோரிக்கை விடுத்துள்ளது. சசிகலா படத்தை அகற்றி அதிமுக தலைமை கழகத்தின் புனிதத்தைர காப்பாற்ற வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணி கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளது.
சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே தூர அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று அம்மாவின் விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மதுசூதனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.