ரஜினி ஆகஸ்ட் மாதம் அரசியல் பிரவேசம்!!

SIBY HERALD

தமிழகத்தின் அரசியல் சூழல்களை ஆய்வு செய்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதற்காக, மாற்றுக் கட்சிகளில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் மும்பையில் இருந்து நடித்துக் கொண்டிருந்தபடியே   மணிக்கணக்கில் விவாதம் நடத்துகிறார்.இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய கட்சியை ரஜினி தொடங்க இருக்கிறார். தேர்தல் தொடர்பாக அவர் போடும் கணக்குகள் மெய்யாகவே ஆச்சரியமளிக்கின்றன என்கின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.


அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என கடந்த மாதம் நடந்த ரசிகர்களிடையேயான சந்திப்பில், அரசியல் பிரவேசம் குறித்து தைரியமாக பகிரங்கமாக பேசினார். இதன்பின்னர், ரசிகர் மன்ற நிர்வாகிகள் கட்டுப்பாட்டை மீறி நடந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டார்.


இந்நிலையில், காலா படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ள ரஜினிகாந்த், அரசியல் பயணம் குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, தமிழகத்துக்கு சட்டசபைத் தேர்தல் வரும் என பெரிதும் நம்புகிறார் ரஜினி. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகக் கட்சியைத் தொடங்கிவிட்டு, பெருவாரியான வாக்குகள் வென்று வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதும் அவரது ஆசை.

தமிழர் அல்லாதவர்' என்ற அடிப்படையில், மொழிவழி சிறுபான்மை மக்கள் உங்களை பெரிதும் ஆதரிப்பார்கள். அனைத்து சமூகத்துக்கும் பொதுவான ஒரு தலைவராகத்தான் மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள். எந்த ஒரு சாதி அடையாளத்தையும் உங்களுக்கு அவ்ர்களால் கொடுக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு உங்களுக்குத்தான் அந்த தனி அடையாளம் கிடைக்க இருக்கிறது. உங்கள் கட்சிக்கு பேக்கிங் கம்யூனிட்டியாக தென்மாவட்டத்து நாடார் சமூகத்து மக்கள் இருப்பார்கள்' என விவரித்திருக்கிறார்கள்.ஆகஸ்ட் மாதத்துக்குள் அவருடைய அரசியல் பயணம் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Find Out More:

Related Articles: