தெர்மாகோல், தெர்மாகோல் செல்லூர் ராஜூ!!

frame தெர்மாகோல், தெர்மாகோல் செல்லூர் ராஜூ!!

SIBY HERALD

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி த்ற்போது நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுக எம்எல்ஏக்கள் தெர்மாகோல் தெர்மாகோல் என ச்பையில் வைத்து கலாயித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. நீர் ஆவியாவதைத் தடுக்க திட்டமிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகை ஆற்றில் தெர்மாகோல் துண்டிகளால் மூடினார்.

Image result for sellur raju

ஆனால் காற்றின் வேகத்தால் தெர்மாகோல் அட்டைகள் தண்ணீரில் போட்ட சில மணி நேரங்களிலே கரை ஓரம் ஒதுங்கியது. இதனால் அமைச்சரின் திட்டம் மொக்கையானது. இதனை திமுக செயல்தலைவ்ர ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலரும் கிண்டலாக விமர்சித்தனர்.

Image result for sellur raju

சமூக வலைதளங்களிலும் போதும் போதும் என நெட்டிசன்கள் வச்சு செய்து வந்தனர்.இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது விழுப்புரம் எம்.எல்.ஏ.,வின் கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்தார்.அவர் பேசிக் கொண்டிருந்த போது அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் ' தெர்மாகோல், தெர்மாகோல்' என திடிர்ரென்று முழக்கமிட்டனர். திமுகவினரின் இந்த கோஷத்தால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது

Find Out More:

Related Articles: