கமல் வந்தால் ஹாப்பியோ ஹாப்பி: குஷ்பு
நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் அவரை நிச்சயாமாக ஆதரிப்பேன் என நடிகையும், காங்., செய்தி தொடர்பாளருமான பிரபல நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
கமல் அரசியலுக்குள் நுளைவதைக் குறித்து குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் தனது சொந்த கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஊழலுக்கு எதிரான கமலின் குரலையும் செயல்பாடுகள் குறித்து மிகுந்த பெருமையடைகிறேன்.
மாற்றம் நோக்கிய உலக நாயகன் கமலின் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். கடந்த 2 மாதங்களில் கமலின் செயல்களால் அரசியல் களம் சூடு கிளம்பி பரபரப்படைந்துள்ளது. எனது நண்பர் கமலுக்கு எனது முழு ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.