பேச்சை மீறி வேலைக்கு சென்ற பெண்.. தலையை இரக்கமில்லாமல் துண்டித்து கொன்ற கணவன்.. பாகிஸ்தானில் பயங்கரம்!

frame பேச்சை மீறி வேலைக்கு சென்ற பெண்.. தலையை இரக்கமில்லாமல் துண்டித்து கொன்ற கணவன்.. பாகிஸ்தானில் பயங்கரம்!

J Ancie


இஸ்லாமாபாத்: தன் பேச்சை மீறி வேலைக்கு சென்ற பெண்ணை கணவனே இரக்கமில்லாமல் தலையை துண்டித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷாம்பி பாட்டியன் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பெண்  நஸ்ரின்.

கவுரவ கொலை


இவரது கணவர் அஃப்ராஹிம். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 37 வயதான நஸ்ரின் அங்குள்ள தொழிற்சாலையில் தினமும் பணிபுரிந்து வந்தார். நஸ்ரின் தினமும் வேலைக்கு செல்வது அவரது கணவர் அஃப்ராமுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் எப்போதும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


தலையை துண்டித்த கணவன்


குழந்தைகளை தனியறையில் பூட்டிய அஃப்ராம் தன் மனைவி நஸ்ரினை தலையை துண்டித்து இரக்கமில்லாமல் கொலை செய்துள்ளார். அஃப்ராம் கவுரவத்துக்காக மனைவியை கொலையை செய்ததாக போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அஃப்ராமை திவிரமாக தேடி வருகின்றனர்.


Find Out More:

Related Articles: