திருடிவிட்டு கழிவறையை சுத்தம் செய்ய மறந்ததால் சிக்கிக்கொண்ட நபர்

J Ancie

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் திடிர்ரென்று வீடு புகுந்து கொள்ளை அடித்த திருடர் ஒருவர், திருடின வீட்டின் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, அவசரத்தில் அதை நீர் ஊற்றிச் சுத்தம் செய்யாமல் போனார்.அதன் மூலம், அங்கு ஒரு முக்கிய  ஆணித்தரமான தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்.



லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சற்றே புறநகர்ப் பகுதியான தவுசண்ட் ஓக்ஸில் அமைந்துள்ள, திருட்டு நடந்த அவ்வீட்டின் கழிவறையில் சேகரிக்கப்பட்ட ஆன்ரூ ஜென்சனின் மனத கழிவுகளின் மாதிரிகள், அமெரிக்காவின் குற்ற மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தொகுத்து வைத்துள்ள ரெக்கார்டு டி.என்.ஏ மாதிரியுடன் நன்கு ஒத்துப்போவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.



கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அந்த அவசரக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட, 42 வயதான திருடன் ஆன்ரூ, கடந்த ஜூலை 28-ஆம் தேதி கைது ஆதாரத்தோடு செய்யப்பட்டார். "தன் அவசர வேலையைச் செய்து முடித்த சந்தேக நபர், கழிவறையில் கழுவ  நீர் ஊற்றாமல் போய்விட்டார்," என்று வென்சுரா கவுண்டியின் காவல் துறை துப்பறிவு அதிகாரி, டிம் லோமன் தெரிவித்துள்ளார்.

Find Out More:

Related Articles: