விஜய்யை சீண்டும் கஸ்தூரி??

J Ancie

மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் என்னும் பாடலை கேட்ட பழைய நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பிரபல அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் வரும் அந்த ஆளப் போறான் தமிழன் பாடல் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது.




இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நேற்று வெளியான பாடல் அருமை என்று தளபதி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒருவர் அந்த பாடல் எப்படி உள்ளது என்று கருத்து நடிகை கஸ்தூரியிடம் ட்விட்டரில் கேட்க அவரும் அதற்கு பதில் அளித்துள்ளார்.




மெர்சல் பாடலை நான் கேட்டேன். உண்மையை சொன்னா விஜய் ரசிகர்கள் எனக்கும் அதுபோல் ஹேஷ்டேக் ஆரம்பிப்பீங்களோ? ஏஆர்ஆர், தளபதியிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.



Find Out More:

Related Articles: