ஆட்சி எங்களால் கலையாது... நாளைக்கு நல்ல செய்தி வரும் - ஓபிஎஸ்

J Ancie


 இரு அணிகளை இணைக்க எந்த நிபந்தனையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த நல்ல செய்தி இரு தினங்களில் வரும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.




பிளவுபட்டுள்ள அதிமுக அணிகளை இணைக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை     தற்போது நடைபெற்று வருகிறது. இணைப்பு பற்றி நேற்றே அறிவிப்பு வெளியாகும் என்று கட்சி தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் இழுபறியால் இணைப்பு தள்ளிப்போனது.



எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனையும் இல்லை. பேச்சுவார்த்தை ந்ல்லபடியாக முடிந்த பிறகு நாங்கள் தரும் அறிக்கையில் எல்லா விவரமும் தருவோம் என்றார். ஆட்சி எங்களால் சத்தியமாக கலையாது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.



Find Out More:

Related Articles: