நீட் தேர்வில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர முடியாது

J Ancie

நீட் தேர்வில் இருந்து நம்ம தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு இந்த வருஷம் ஒப்புதல் தர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளதால் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை கடகட வென்று நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


நீட் விலக்கு தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 17ம் தேதி உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்த போது பரபரப்பான  நீட் விவகாரத்தில், அரசாணையை ரத்து செய்தும், தமிழக அரசு கலந்தாய்வை நடத்தவில்லை என்றும், தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது.


இன்று அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரவே முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Find Out More:

Related Articles: