கப்பல்துறையை குறிவைக்கும் ஹேக்கர்கள்: திணறும் கப்பல் நிறுவனங்கள்

J Ancie

சைபர் கீல் என்ற ஒரு இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள், ஒரு கப்பல் நிறுவனத்தின் மின்னஞ்சல் நடவடிக்கைகளை திவிர ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான ஒரு  விஷயத்தைக் அதில் கண்டுபிடித்தனர். கப்பல் நிறுவனத்தின் இணையத் தரவுகளில் அத்துமீறி சூழ்ச்சியால் நுழைந்த கணினி ஹேக்கர்கள், அதில் ஒரு சிறிய வகை வைரஸை வைத்துள்ளனர்.


இதன் மூலம் கப்பல் நிறுவனத்தின் நிதித்துறையில் இருப்பவர்களின் நடவடிக்கைகளை மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் எங்கிருந்தோ கண்காணித்துள்ளனர் என்கிறார் சைபர் கீல் நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு ஜென்சன்.



கப்பல் நிறுவனத்திற்கு எரிபொருளை  விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று கட்டணம் செலுத்துமாறு கப்பல் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பும் போதெல்லாம், அந்த மின்னஞ்சல்களை கப்பல் நிறுவனத்தின் ஊழியர்கள்  பார்பதற்கு முன்பே அதில் வேறு வங்கிக் கணக்கு எண்ணை அந்த வைரஸ் சேர்த்துள்ளது. இதனைக் கப்பல் நிறுவனம் கண்டுபிடிக்கும் முன்பு, பல மில்லியன் டாலர்கள் ஹேக்கர்களின் சொந்த வங்கிக் கணக்குக்கு சென்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த சைபர் தாக்குதலில், உலகின் பிரபல முன்னணி சரக்கு கப்பல் நிறுவனங்களில் ஒன்றான மேர்ஸ்க் கடுமையான இதுபோன்ற பாதிப்புகளை சந்தித்தது.


Find Out More:

Related Articles: