எடியூரப்பா நிலையில் தற்போது எடப்பாடி.. எப்படி தனது அரசை காப்பாற்றினார் சபாநாயகர் தெரியுமா?

frame எடியூரப்பா நிலையில் தற்போது எடப்பாடி.. எப்படி தனது அரசை காப்பாற்றினார் சபாநாயகர் தெரியுமா?

SIBY HERALD


 

எடியூரப்பா அரசில் என்னென்ன சிக்கல்கள் ஏற்பட்டதோ அதை போலவே எடப்பாடி பழனிச்சாமி அரசும் இப்போது எதிர்கொண்டு வருகிறது. பாஜக வரலாற்றில் முதல் முறையாக தென் இந்தியாவில் ஆட்சி அமைத்துவிட்டதாக பெருமை பேசத்தொடங்கிய காலகட்டம் அது. தங்கள் கர்நாடக பிரச்சார பீரங்கியான எடியூரப்பாவை தங்கள் அரசின் முதல்வராக்கி அழகு பார்த்தது அப்போதுள்ள பாஜக தலைமை. ஆனால் இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.
Image result for yeddyurappa

பண பலம் மிகுந்த பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத குவாரித் தொழிலுக்கு லேசாக குடைசல் கொடுத்தார் எடியூரப்பா. எரிமலையாக வெடித்துவிட்டனர் அவர்கள். இப்போது எடப்பாடி அரசும், எடியூரப்பா அரசை போன்ற சூழ்நிலைக்கு தான் உள்ளாகியுள்ளது. எதிர்ப்பாளர்களான 19 எம்எல்ஏக்களை நீக்கிவிட்டு அனவரோடும் நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினால், ஏற்கனவே எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன் வைத்து உதாரணமாக கொண்டு கோர்ட்டுக்கு செல்ல அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.
Image result for yeddyurappa edappadi palanisamy


ஆனால் அப்போதைய கர்நாடக ஆளுநராவது தொடர்ந்து எடியூரப்பா அரசுக்குகே அழுத்தம் கொடுத்தார். இப்போதைய தமிழக ஆளுநரோ, எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த எந்த வித வாய்ப்பில்லை என்றே கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


Find Out More:

Related Articles: