நம்பிக்கை வாக்கெடுப்பு... எங்களிடம் கைவசம் இருக்கும் பந்தை பயன்படுத்த தயங்கமாட்டோம்: ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக நலன்களைப் பாதுகாக்க எங்களிடம் கைவசம் இருக்கும் பந்தை பயன்படுத்த எள்முனையளவும் யோசிக்கமாட்டோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று மொத்தமாக கருதுவதற்கு இடமில்லை", என்று ஆளுநரே தெரிவித்திருப்பது, அரசியல் சட்டப்பதவியில் பொருப்பாக அமர்ந்துகொண்டு, ஜனநாயக படுகொலைக்கு அவரே பச்சைக்கொடிக் காட்டுவதுபோல் அமைந்துவிட்டதை எண்ணி கவலையும் பெரும் அதிர்ச்சியடைகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா.முத்தரசன், , மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா ஆகியோரிடன் இப்படியொரு பொருப்பில்லா கருத்தினை, ஆளுநர் தெரிவித்து, "பந்து என் கோர்ட்டில் இல்லை", என்று கூறியிருப்பதும் ஆச்சரியமளிக்கிறது