ஹைட்ரோ கார்பன் அரசுத்  திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம்  கொடுத்த வள்ர்மதிக்கு மோசமான கொடுமைகள்

frame ஹைட்ரோ கார்பன் அரசுத் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்த வள்ர்மதிக்கு மோசமான கொடுமைகள்

J Ancie

ஹைட்ரோ கார்பன் அரசுத்  திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் வழக்கு போடப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.  பலரின் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது அந்த போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்து சுதந்திரமாக வெளியே வந்தார்.

Image result for valarmathi in hydrocarbon scheme jail


சிறையில் இருந்து வெளியே வந்து அனிதாவுக்கு ஆதரவாகவும் நீட்டுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் தற்சமையம் கலந்துகொண்டிருந்த வளர்மதியிடம் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று அவரை பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் முன்னதாக சிறைகளில் தனக்கு நேர்ந்த கேவலமான கொடுமைகள் குறித்து பேசியுள்ளார் மாணவி வளர்மதி.திருச்சி சிறையில் வளர்மதியை மோசமாக நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. மேலும் கோவை சிறையில் வளர்மதி தனியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் எனவும் கூறப்பட்டது. இது குறித்து வளர்மதியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

Image result for valarmathi in hydrocarbon scheme jail

இதற்கு பதில் அளித்த வளர்மதி திருச்சியில் நடந்தது அனத்தும் உண்மைதான் என கூறினார். நான் வெளிப்படையாக கூறுவதால் எனக்கு மட்டும் தான் அப்படி நடந்ததாக நீங்கள் நினைக்க வேண்டாம். சாதாரண வழக்குல சிறைக்கு செல்பவர்களுக்குக்கூட இந்த மோசமான கொடுமைகள் நடக்கின்றன.


Find Out More:

Related Articles: