அடப்பாவிகாளா இத்தனை பேர் இருந்திங்களா??வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அசல் ஓடுநர் உரிமம் வைதிருக்க வேண்டும் என்ற உத்தரவை அடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் சனிகிழமை விடுமுறை நாட்களிலும் அலுவலகங்களில் கூட்டம் பயங்கரமாக அலைமோதுகிறது.
வாகன ஓட்டுநர்கள் தங்கள் கையில் அசல் ஓடுநர் உரிமத்தை கையில் கண்டிபாக வைதிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் விடுமுறை நாளான இன்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைதிருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இல்லாதபோதே போக்குவரத்து காவல்துறையினர் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பது வழக்கம். தற்போது சொல்லவா வேண்டும்??.
இதனால் சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், தவறவிட்டார்கள் என உள்ளிட்ட கூட்டமும் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் குவிந்து வருகிறார்கள்.