கூட்டணிக்கு அழைக்கும் கமல்.. ரஜினி மௌனம் ஏன்?

J Ancie


மக்கள் விரும்பினால்  நான் அரசியலுக்கு வரவும் தயார், ரஜினியை என்னோடு கூட்டணி சேர்க்கவும் தயார் என்று விழா ஒன்றில் நடிகர் கமல் பேசிய பகிரங்கமாக நிலையில் தனது தலைவர் ரஜினிகாந்த் இன்னும் அமைதி மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்திய அரசியல்  ஹாட் டாப்பிக் என்று பார்த்தால் அதிமுக சில்லரை களேபரங்களையும் தாண்டி ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் எப்போ என்பது தான் முன்னணி வகித்து வருகிறது.



ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இன்னும் நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும் அவரது அரசியல் ஆசையை அவரது நெருங்கிய நண்பர் ராம் பகதூர் மூலமும், தமிழருவி மணியன் மூலமும் ஊடகங்களுக்கு தெரிவித்துவிட்டார். இதனால் மனம் குளிர்ந்த ரஜினி ரசிகர்கள் 'தலைவர்' எப்போது அவர் கட்சியை தொடங்குவார், நாம் எப்போது 'தலைவரின்' அருமையான கொள்கைகளை பிரசாரம் செய்வது என்று அடுத்த கட்ட திவிர நடவடிக்கை குறித்து யோசனையில் உள்ளனர்.



சென்னையில் தமிழ் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், மக்கள் விரும்பினால் தான் கண்டிப்பாக அரசியலுக்கு வர தயார். ரஜினி ஆசைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு பின்னர், எனது அணியில் அவரை இணைத்துக்கொள்ள தயார் என்றும் அவர் பேசியிருந்தார்.


Find Out More:

Related Articles: