விவசாய கடனில் வெறும் 1 பைசா தள்ளுபடி செய்து அதிர வைத்த உ.பி அரசு புரட்சி!

J Ancie



விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் உத்தரப்பிரதேசத்தில் கடன் பட்ட விவசாயிக்கு வெறும் 1 பைசா மட்டுமே தள்ளுபடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பிரசாரத்தின்போது, தாங்கள் வாகை சூடி ஆட்சிக்கு வந்தால் விவசாய பயிர்க் கடன்களை ரத்து செய்வோம் என்று பாஜக ஒரு  வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி பாஜக அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் வெற்றிகரமாக முதல்வரானார்.




இந்நிலையில் விவசாயிகளின் ரூ.36 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இதன்படி, முதல் கட்டமாக 11.93 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய 7,371 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி முதலில் செய்யப்பட்டு உள்ளதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஈஷ்வர் தயாள் என்ற ஒரு விவசாயிக்கு வெறும் 19 பைசா மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சான்றிதழ் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.




இதேபோல், ராமானந்த் என்பவருக்கு 1.79 காசுகளும், முன்னிலால் போளி என்பவருக்கு ரூ.2-ம் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுராவில் உள்ள ஒரு எழை விவசாயிக்கு அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி சான்றிதழில் வெறும் 1 பைசா தள்ளுபடி செய்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Find Out More:

Related Articles: