நவராத்திரி கொலுவுக்கு புது அதிரடி வரவு ஜெயலலிதா பொம்மை - டுவிட்டரில் சர்ச்சை!

J Ancie


நவராத்திரி பண்டிகைக்காக வைக்கப்படும் கொலுவில் இந்த ஆண்டின் புதிய  அதிரடி வரவாக வந்துள்ள ஜெயலலிதா பொம்மைக்கு டுவிட்டரில் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.   சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை  குற்றவாளிகள் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.




இந்நிலையில் இந்த ஆண்டின் புது அதிரடி வரவு என்று ஜெயலலிதாவின் கொலு பொம்மையை நெட்டிசன் ஒருவர் பெருமையாக பதிவிட்டிருந்தார். ஜெயலலிதாவின் மார்பளவு பொம்மை, முழுஉருவ பொம்மை என இரண்டு வித்தியாசமான வகையில் இந்த ஆண்டு கொலுவிற்கு பொம்மை விற்பனைக்கு வந்திருப்பதை அவர் டுவீட்டியிருந்தார்.




ஆனால் சட்டத்தால் தண்டிக்கப்பட்ட ஏஒன்  சொத்துக்குவிப்பு குற்றவாளியை எப்படி கடவுளாக்குவது என்று ஒரு வித எதிர்ப்பும் வலுக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு உயிரிழந்ததால் ஒரு வழியாக விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Find Out More:

Related Articles: