18 எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கபடும் வைட்டமின் 'ப' தெரியுமா??
எதியூரப்பா விவகாரத்தில் கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் கையாண்ட அதே யுக்தியைத்தான் தினகரன் குரூப் கையில் எடுத்தது. அதனால்தான் கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அம்மாநில ஆளுநரிடம் கொடுத்த தனிதனி கடிதத்தை அப்படியே காப்பியடித்தது போல தமிழக ஆளுநரிடம் தினகரன் சென்று குரூப் கொடுத்தது. இதனால் மிகவும் தெம்பாக வலம் வந்து முதல்வர் எடப்பாடியார் தரப்பை கடுமையாக மிரட்டி வந்தது. புதுவையிலும் கூர்க்கிலும் பதுங்கிக் கொண்டு முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அவ்ர் மீது அடுக்கிக் கொண்டு வந்தனர். இதன் உச்சகட்ட கிளைமாக்ஸ் காட்சியாக 18 எம்.எல்.ஏக்களையும் அதிரடியாக சபாநாயகர் தனபால் நேற்று அவர்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கட்சி கொள்கைக்கு எதிராக பேசிவந்ததால் கட்சி விரோதமாக செயல்படுவதாக கருதி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் நேற்று அறிவித்தார். இந்த தகவல் குடகு ரிசார்ட்டில் கும்மியடித்துக் கொண்டிருந்த எம்.எல்.ஏக்களுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. அய்யோ பதவி போய்விட்டதே என அழுது புலம்பி அனைவரும் ஒப்பாரி வைத்திருக்கின்றனர். ஆனாலும் அந்த எம்.எல்.ஏக்கள் சமாதானம் அடையவில்லையாம். எந்த நேரத்திலும் குடகு ரிசார்ட்டில் இருந்து எஸ்கேப்பாகி சபாநாயகரிடம் காலில் விழுந்து சரணடையவே வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.