எச் 1பி விசா வழங்குவதில் இப்போ வரைக்கும் எந்த வித கட்டுப்பாடும் இல்லை- அமெரிக்கா
கூடவே, அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நல்ல திறமையான அமெர்க்கர்களையே பணியில் கண்டிப்பாக அமர்த்த வேண்டும் என்றும் நிபந்தனைகளையும் விதித்தார். இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் யாவும் கடும் சரிவைச் சந்தித்தன.
இதனை சட்டென்று உணர்ந்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் தன்னுடைய கடுமையான முடிவை தடாலடியாக மாற்றிக் கொண்டார். திறமையான ஊழியர்களுக்கு அமெரிக்காவில் எந்த வித கட்டுப்பாடும் தடையும் விதிக்கப்பட மாட்டாதுஎன்றும் நம்பிக்கை தெரிவித்தார். எச்-1பி விசா விதிமுறைகளில் எந்த ஒரு கட்டுப்பாடும் தற்சமையம் விதிக்கப்படவில்லை என்றும், இன்னும் மறுஆய்வில் தான் இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.