பிரதமர் மோடி முன்பு கர்நாடக பாடல்கள் பாடிய பாரத ரத்னா எம் எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகள்
பெரிய விருதானபாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது கொள்ளுப்பேத்திகள் பிரதமர் மோடியை நேராய் சந்தித்து ஸ்ரீசந்திரசேகர் சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய மைத்ரீம் பஜத என்று தொடங்கும் கர்நாடக பாடலை பாடினர்.
இந்தியாவின் மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகி பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரை மண்ணில் பிறந்தார். இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் 'குறையொன்றுமில்லை' என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாடகியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது. 100 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டது.
இந்த நாணயங்களை வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி எனப்படும் பிரபல எம்எஸ் சுப்புலட்சுமி, தனது கர்நாடக இசைப்பாடலால் அனைவரின் மனசையும் கவர்ந்தவர் என்று புகழ்மாலை சூட்டினார். சரோஜினி நாயுடு அவர்களால் இந்தியாவின் நைட்டீங்கேல் என்றும் பாடகி லதா மங்கேஷ்கரால் தபஸ்வினி என்றும் பலரால் பாராட்டப் பெற்றவர் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் இறைவணக்கப் பாடலை எம்எஸ் சுப்புலட்சுமி இவர்களின் கொள்ளுப்பேத்திகள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா மிகவும் அழகாக பாடினர். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவரின் ஆசி பெற்றனர். அவர் முன்பாக சில கர்நாடக இசைப்பாடல்கள் பாடினர்.