சென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி  மறுப்பு!

frame சென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி மறுப்பு!

SIBY HERALD
சென்னையிலிருந்து சபரிமலைக்கு சென்ற பதினோரு பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் அவர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பினர். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

Image result for women sabarimala


அதன் பிரகாரம்,  எந்த வயது உடைய பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் சென்று அய்யப்பனை தரிசிக்கலாம் , எந்த வித தடைகளும் இல்லை என்பது தான் அது. இதனை தொடர்ந்து பல நாட்களாக பாஜக மற்றும் காங்கிரஸ் என பல கட்சி ஆட்களும் வன்முறையிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பலரும் இன்னும் எதிர்த்த வண்ணம் உள்ளனர். கேரளா முதல்வர் பினராயி விஜயன் சபரிமலையை இன்னொரு அயோத்தியாக மாற்ற விட மாட்டோம் என்று கூறியிருந்தார். சென்ற வாரம் சில திருநங்கைகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று tharisanam செய்தனர்.

இந்த வாரம் மனிதி என்ற அமைப்பை சேர்ந்த பதினோரு பெண்கள் சபரிமலை செல்ல சென்னையிலிருந்து வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு எதிர்ப்பு வலுத்ததால் போலீசாரே அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர்.  இதனால் பெரும் கூச்சலும் குழப்பமும் பம்பையில் நிலவிவருகிறது.  


Find Out More:

Related Articles: