ஸ்டெர்லைட் திறக்க கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி!

frame ஸ்டெர்லைட் திறக்க கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி!

SIBY HERALD
ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழக அரசு சென்ற ஆண்டு சீல் வைத்து மூடியது. நூறு நாட்களாக போராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட்டால் சுற்றுசூழலுக்கும் மக்களின் உடல்நலத்துக்கு ஆபத்து வருவதாக கூறி போராடி வந்தனர்.நூறாவது நாளன்று திடீரென காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

Image result for sterlite


இதில் பதிமூன்று பேர் பரிதாபமாக உயிரிழக்கவே, போராட்டம் வலுவடைந்தது. இதனை தொடர்ந்து தான் அரசு சீல் வைத்து நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. ஆனாலும் பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா முறையீடு செய்யவே அவர்கள் செய்த விசாரணையில் ஸ்டெர்லைட்டால் ஆபத்து இல்லை என்று கூறி மீண்டும் திறக்க சொன்னார்கள்.


அனால் அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடவே, நேற்று இவ்வழக்கை விசாரித்த கோர்ட் ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்றும், வேதாந்தா வேண்டுமென்றால் சென்னை ஹைகோர்ட்டில் எதாவது பார்த்து கொள்ளட்டும் என்றும் கூறி, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது, இதனால் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் சந்தோஷம் அடைந்தனர். 


Find Out More:

Related Articles: