எடப்பாடியை கேள்வி கேட்கும் கமல்!

frame எடப்பாடியை கேள்வி கேட்கும் கமல்!

SIBY HERALD
உலக நாயகன் கமல் ஹாசன் தனது மக்கள் நீதி மையம் கட்சியின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே பொள்ளாச்சி பெண்கள் விவகாரம் குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் அவர் அந்த பெண்களின் அலறலை கேட்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது என்று கூறியிருந்தார்.

Image result for kamal edappadi


நண்பன் என்று நம்பி வந்தேனே காப்பாற்றுவாய் என்று நினைத்தேன் என்று கூறும் அந்த பெண்ணின் குரல் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு கூறிய கமல் தனது சாட்டையை அரசின் பக்கம் சுழற்றினார். எதனால் இந்த அரசு இந்த கேசில சரியான நடவடிக்கை எடுக்கவில்லை?

Image result for kamal edappadi


காவல் ஆணையர் எதற்காக பெண்ணின் பெயரை கூறினார் அது மாபெரும் தவறு, மேலும் இவ்வாறு வீடியோக்கள் எப்படி கிடைத்தது, எவ்வாறு வெளியானது, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்ல போகிறீர்கள் சாமி என்று எடப்பாடி பழனிசாமி முதல்வரை நோக்கி கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.


Find Out More:

Related Articles: