சென்னையின் மாபெரும் தண்ணீர் பஞ்சம்!
தமிழ்நாடு வெதர்மேன் இதனை கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத குறைந்த நீர்மட்டம் என்று அதிர்ச்சி தகவலாய் கூறியுள்ளார்.சென்னையின் முக்கியமான செம்பரப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 கன அடிகள் இருந்தும் அதில் இப்பொழுது ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
செங்குன்றத்தில் 28 கன அடி, சோழாபுரம் ஏரியில் 4 கன அடி என்ன மிக மிக குறைவாகவே தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் உள்ள 118 கன அடி கூட சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்காது. ஜூன் மாதம் வெப்ப சலனம் காரணமாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மழை பெய்யலாம் என்றாலும் தண்ணீர் தேவையை இந்த சிறு மழையால் தீர்க்க முடியாது. அவ்வப்பொழுது மழை பெய்யும் போதே சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவது தான் தீர்வு என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.