பேச்சுரிமை வரம்பில்லையா?பா.ரஞ்சித்திற்கு நீதிபதி கேள்வி!

SIBY HERALD

சில நாட்களுக்கு முன் தஞ்சை திருப்பனந்தாள் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்து பேசினார். இதனையடுத்து இரண்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க ரஞ்சித் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்தது.  விசாரணையின்போது, பேச்சுரிமை என்றாலும் வரம்பில்லையா என பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற  நீதிபதி பாரதிதாசன் கேள்வி எழுப்பினார்.



ராஜராஜ சோழன்  நிலங்களை கையகப்படுத்தினார் என எந்நோக்கத்தில் ரஞ்சித் பேசினார் என கேள்வி எழுப்பப்பட, பா.ரஞ்சித் ஆதாரங்களுடன் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

 


Find Out More:

Related Articles: