
மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் இடமாற்றம்!
தமிழக பள்ளிக் கல்வித் துறை கீழ் ஆசிரியர் அல்லாத அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோருக்கு இடமாற்றம் வழங்கப்பட பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பணியாளர்களும் உத்வேகத்துடன் செயல்பட, புகாருக்கு இடமின்றி செயல்பட 30.6.2019 அன்று மூன்று ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு ஜூலை 3 மாவட்ட விருப்ப கலந்தாய்வு நடத்தி இடமாற்றம் வழங்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.