அதிக வரி குறித்து நிர்மலா சீதாராமன்!
சென்னையில் சர்வதேச வணிக மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
அதிக வரி குறித்து பேசிய நிதியமைச்சர், பணக்காரர் பட்டியலில் ஐந்து ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இருப்பார்கள். ஏழை வாழ்க்கையை மேம்படுத்தும் பொறுப்பை பகிர்ந்துகொள்ள வேண்டும். இது கொள்ளை அல்ல, அவர்களின் தொழிலைப் பாதிப்பது எண்ணம் அல்ல என்றார்.
வேலைவாய்ப்பு வளர்த்த இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாராட்டிய நிர்மலா சீதாராமன், 60 ஆண்டுகளில் அரசு நியாயமான வரி விதித்து வருவதாக கூறினார்.