மதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்

SIBY HERALD
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி 55 நாட்களைக் கடந்து விட்டது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் சேரன் மீது அவதூறான புகார் கூறி மீரா பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சரவணன் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அதன் தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயற்சித்ததாக இந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.  



டாஸ்க் ஒன்றின் போது அவர் கர்நாடகா மற்றும் காவிரிப் பிரச்சினை பற்றிய பேசியதால், அவருக்கும் ஷெரீனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பவில்லை. கமலுடன் மேடையில் தோன்றிய மதுவும், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசவில்லை. அதோடு கமலும் கூட மதுமிதாவிற்கு அறிவுரை கூறினாரே தவிர, அவரை இந்த நிலைக்கு தள்ளியர்கள் யார் என்பதை தெரியப்படுத்தவில்லை. அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை.




இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா? ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை' எனத் தெரிவித்துள்ளார்.

ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை' எனத் தெரிவித்துள்ளார்.

Find Out More:

Related Articles: