மீண்டும் 72 ரூபாயைத் தொட்ட இந்திய ரூபாய்

SIBY HERALD

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மெல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. நேற்று மாலை ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.40 ரூபாய்க்கு நிறைவு அடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேரத் தொடக்கத்திலேயே 71.97 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. அத்தனை ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய ரூபாய் மதிப்பு தற்போது சுமாராக 72.39 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. சுமாராக ஒரே நாளில் 0.98 ரூபாய் மதிப்பை இழந்து இருக்கிறது. 


1. ஜிடிபி 2019 - 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டுக்கான இந்தியா ஜிடிபி வளர்ச்சி வெறும் 5 சதவிகிதமாக வந்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று தரவுகளை வெளியிட்டது இந்திய அரசு. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத மோசமான காலாண்டு ஜிடிபி வளர்ச்சி எனத் தெரிய வந்தது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியாவின் உற்பத்தித் துறையும் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி சரிந்து இருக்கிறது. 

2. மார்க்கெட் செண்டிமெண்ட் ஏற்கனவே இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5% தான் என மத்திய அரசே சொன்னதால் இந்த அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து இருக்கிறது. 




3. டாலர் மதிப்பு அதிகரிப்பு உலக பொருளாதார சூழல்கள் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் இல்லாமல் உலகின் ஆறு முக்கிய கரன்ஸிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு சுமார் 0.4 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அந்த ஆறு முக்கிய நாடுகளின் கரன்ஸி மதிப்பு சரிந்து இருக்கிறது.


Find Out More:

Related Articles: