மோடி பேச்சில் மயங்குமா தமிழகம்?
தமிழ் மொழி மீதுதான் பற்றா அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீதும் பற்றா என்றும் புரியவில்லை. இதில் முக்கியமானது.. அடிப்படையாகவே தமிழ் மக்கள் தங்கள் மொழி மீது பாசம் காட்டுவோரை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.. ஆனால் அதில் உண்மையாக இருந்தால் மட்டுமே.. இல்லாவிட்டால் நம்ப மாட்டார்கள். இந்த அடிப்படையை பாஜகவினர் புரிந்து வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. புரிந்துள்ளது போலவும் தெரியவில்லை.
தமிழக மக்கள் மீது பாசம் என்றால், தமிழக வளங்கள் சூறையாடப்பட்டிருக்காது.. படேல் சிலைக்கு 900 கோடியும், கஜா புயலுக்கு 350 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்காது.. மாநில உரிமைகளை கையில் எடுத்து மொழி திணிப்பு வரை பாஜக சென்றிருக்காது.. முக்கியமா காவிரி டெல்டா காவு கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது என்பதே! பிரதமருக்கு, ஒருவேளை தமிழ் மீதுதான் பற்று என்றால், கீழடி ஆய்வு சம்பந்தமான எல்லா முயற்சிகளையும் பாஜக ஏன் அன்றே கையில் எடுக்கவில்லை என்ற சந்தேகமும் எழுகிறது. அப்படியானால், மோடி இன்று இட்லி தோசை, சாம்பார் பற்றி பேசவும், தமிழ் தொன்மையான மொழி என்று கூறவும் என்ன காரணம்? வரும் தேர்தலை கணக்கு செய்கிறதா? அல்லது உணர்ச்சிபூர்வமாக பேசினால் தமிழர்கள் விழுந்துவிடுவார்கள் என்பதினாலா? மொழி திணிப்பு காயத்துக்கு மருந்து என்று இந்த பேச்சினை எடுத்து கொள்வதா? தெரியவில்லை. அப்படியானால் இன்று சென்னையில் விமான நிலைய வரவேற்பில் பேசும்போது தமிழிலேயே அவர் பேசியிருக்கலாம்