லண்டனின் உயரிய விருது வாழும் கலை நிறுவனருக்கு வழங்கல்

frame லண்டனின் உயரிய விருது வாழும் கலை நிறுவனருக்கு வழங்கல்

Sekar Chandra
லண்டன்:
உலக அமைதிக்காக பாடுபட்டு வரும் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கருக்கு லண்டனில் உயரிய கவுரவ பெல்லோஷிப் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை.


வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக குருவுமான ரவிசங்கர். உலக அமைதி, இந்திய கலாச்சாரத்தை வளர்ப்பது, வன்முறை இல்லாத சமூகத்தை உருவாக்கு பாடுபடுவது போன்ற பல்வேறு அமைதிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


இவரது இந்த சேவையை பாராட்டி லண்டனில் உள்ள தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் (என்.ஐ.எஸ்.ஏ.யூ.) சார்பில் 'கவுரவ பெல்லோஷிப்' என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்தி உள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More