ராஜகோபுரத்தில் விரிசல்... பக்தர்கள் அதிர்ச்சி...

Sekar Chandra
திருவண்ணாமலை:
அதிர்ச்சி... பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எதற்காக தெரியுமா?


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதுதான் அதிர்ச்சிக்கு காரணம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டனது. கோவிலின் கிழக்கு திசையில் கட்டப்பட்டுள்ளது.


இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக கோபுரத்தில் துாய்மை செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுட்டனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது. 


ராஜகோபுரத்தில் உள்ள மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள நான்காவது துாணில் மேற்கூரையில் மூன்றாவது பீமில், நான்கு அடி துாரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 


அப்புறம் என்ன தகவல் அதிகாரிகளுக்க பறக்க கிடுகிடுவென பணிகள் நடந்தன. கோபுரத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படாமல், மூலிகைகளால் விரிசல்களை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தாலும் அதிகாரிகளின் துரித பணியை பாராட்டினர்.



Find Out More:

Related Articles: