திருமண தடைகளை நீக்கும் துர்க்கை அம்மன்

Sekar Chandra
துர்க்கை அம்மன் சன்னதியில், சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி,  அதில் திருவிளக்கு ஏற்ற வேண்டும். திருவிளக்கு ஏற்றும் போது, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து விளக்கில் ஊற்றி, தீக்குச்சியினால் தீபம் ஏற்றாமல், பத்தியை எண்ணையில் நனைத்து அதில் தீயை கொளுத்தி, விளக்கை ஏற்ற வேண்டும். 


விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். மேலும் திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். 


இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டி சாறு எடுத்து, அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் விரதமிருந்து வழிபட வேண்டும். இவ்வாறு விரதமிருந்து வழிபட்டு வந்தால் திருமணத் தடை சீக்கிரமே சரியாகிவிடும்.



Find Out More:

Related Articles: